சீனாவில் கைதான பிரித்தானிய தூதரக அதிகாரி! கடும் கண்டனம் வெளியீடு

Report

சீனாவினால் பிரித்தானிய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹொங் கொங் பிரித்தானிய தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொங் கொங்கின் ஹெச்கே01 செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஹொங் கொங்கிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் சீன நகரமான ஷின்ஷெனுக்கு அண்மையில் பயணம் செய்திருந்தார்.

ஒரு நாள் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக அங்கு சென்ற அவர், ஹொங் கொங் திரும்பவில்லை. ஷென்ஷென் நகரில் அவரை சீன அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே, தங்களது தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹொங் கொங்கிலிருந்து ஷென்ஷென் தூதரக அதிகாரி சீனாவினால் கைது செய்யப்பட்ட தகவல் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து, ஹொங் கொங் மற்றும் ஷென்ஷென் நகரம் அமைந்துள்ள குவாங்டாங் மாகாண அரசாங்கங்களிடம் விவரம் கோரியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

610 total views