புகைப்பழக்கத்தை கைவிட விரும்பும் நபர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி

Report

புகைப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5 ஆண்டுகளில் இதயக் குழல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நேஷ்வில்லேவின் வேண்டர்பில்ட் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. சுமார் 8 ஆயிரத்து 700 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

அவர்களில், 3 ஆயிரத்து 800 பேர் பல தசாப்தங்களாகப் புகைப்பிடித்து வந்தனர். எஞ்சியவர்கள் அவர்களின் மகன், மகள்கள், வயது வந்த பேரன் பேத்திகள் ஆவர்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு 5 ஆண்டுகள் ஆனவர்களுக்கு இருதயக் குழல் சார்ந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கமே இல்லாதவருக்கு இணையான இதய, நுரையீரல் ஆரோக்கியத்தைப் பெற ஒரு புகைப்பழக்கம் உள்ள நபர் 10 முதல் 25 ஆண்டுகள் வரை அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டியுள்ளதாகவும் அந்த ஆய்வு கணித்துள்ளது.

அமெரிக்காவில் வயது வந்தோரில் புகைப்பழக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை 1960-களில் 42 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது வெறும் 13 சதவீதமாகக் குறைந்துள்ளதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

736 total views