16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மடக்கி பிடித்த தீயணைப்பு வீரர்! என்ன சொன்னார் தெரியுமா?

Report

தாய்லாந்தில், வீட்டின் மேற்கூரையில் சுற்றியிருந்த 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு துறை வீரர் சாமர்த்தியமாக மீட்டு செல்லும் காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில், பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரை உத்திரம் அருகே மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதாகவும், அதனை பிடித்து செல்லும்படி வீட்டு உரிமையாளர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு சென்ற பின்யோ புக்-பின்யோ என்ற தீயணைப்பு வீரர், சாமர்த்தியமாக அதன் தலையை பிடித்து அழுத்தி, பாம்பை வெளியே எடுத்து சாக்குப்பையில் அடைத்தார்.

இந்த காட்சிகளை வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த நிலையில், இதுபோல் நாகப்பாம்பு உள்ளிட்ட பல விஷ தன்மைகளை கொண்ட பாம்புகளை பிடித்துள்ளதாக தீயணைப்பு வீரர் புர்பின்யோ தெரிவித்தார்.

மேலும், பாங்காக்கில் தீ விபத்துகளை விட பாம்புகளை பிடித்து செல்வதே பெரும் பணியாக இருக்கும் என்றும், நாளொன்றுக்கு 100 பாம்புகள் பிடிக்கப்படும் என்றும், பெரும்பாலும் மழைக்காலங்களில் வீட்டு தோட்டம் மற்றும் கழிவறைகளில் பாம்புகள் அதிகம் பதுங்கி இருக்கும் என தெரிவித்தார்.

594 total views