ரயிலில் 340 பயணிகளுக்கு நேர இருந்த கதி!

Report

ஜப்பானில் அதிவேக ரயில் ஒன்று, கதவு திறந்த நிலையில் மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறது.

நேற்று (ஆகஸ்ட் 21) தோக்கியோ நோக்கிப் புறப்பட்ட அந்த ரயிலில் 340 பயணிகள் இருந்தனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

கதவுகள் திறந்திருந்ததை அறிந்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். சோதனைகளுக்காகச் சுமார் 15 நிமிடங்களுக்கு ரயில் சுரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ரயில் கதவுகள் பொதுவாக தானியக்க முறையில் செயல்படக்கூடியவை. அவற்றை கையால் இயக்கித் திறக்கும் கருவியும் இருக்கும்.

அந்தக் கருவியைத் துப்புரவாளர் ஒருவர் மூட மறந்ததால், கதவுகள் திறந்த நிலையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டது.

கதவு திறந்தவாறு ரயில் சுமார் 4 கிலோ மீட்டர் தூறம் சென்றது. திறந்திருந்த கதவுக்கு அருகில் எவரும் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

சம்பவம் மீண்டும் நடக்காது என்று ரயில் நிறுவனம் உறுதி கூறியிருக்கிறது. ரயில் தோக்கியோவுக்கு 19 நிமிடம் தாமதமாகச் சென்றது. சேவைத் தாமதத்தால் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மணிக்கு 320 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய Shinkansen எனும் ஜப்பானிய ரயில்கள், உலகின் ஆக வேகமானவை.

3694 total views