தங்கச் சுரங்கத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய யானைக்கூட்டம்!

Report

மலேசியாவில் தங்கச் சுரங்கத்திற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து தத்தளித்த 5 யானைகளை அந்நாட்டு வனத்துறையினர் பல மணி நேரம் போராடி மீட்டுள்ளனர்.

ஒரு குட்டி யானையுடன் 4 பெரிய யானைகள் தண்ணீரைத் தேடி அலைந்த போது, நீர் நிரம்பிய அந்த குழிக்குள் யானைகள் விழுந்து சிக்கிக் கொண்டன.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் குழியின் ஒரு பகுதியில் வழி ஏற்படுத்தினர். பின்னர் சுற்றியிருந்தவர்கள் யானைகளுக்கு வழி சொல்ல, அதனைக் கேட்டு சமர்த்தாக கரையேறிய யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

3703 total views