ஈ சிகரெட் புகை - ஒருவர் உயிரிழப்பு

Report

அமெரிக்காவில் ஈ சிகரெட் புகைப்பான்களால் சுவாசக் கோளாறில் பாதிப்பப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை கூறியுள்ளது.

ஈ சிகரெட், புகைப்பான்களின் பயன்பாடு அமெரிக்க இளைஞர்களிடையே ஏற்கெனவே இருந்தாலும் சமீப காலங்களில் அவர்கள் மூச்சுத்திணறல், மயக்கம், இருமல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இளைஞர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு சிகிச்சையில் இருந்த இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இறந்துவிட்டதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை கூறியுள்ளது.

அனைத்து மாகாண மருத்துவர்களிடமும் தொடர்பில் இருப்பதாகவும், அத்தகைய நோயாளிகளின் நிலை குறித்து கண்காணிப்பதாகவும் கூறியுள்ளது. நுரையீரல் பிரச்சனைகள் ஏற்படக் காரணம், புகைப்பானா? சேர்மப் பொருளா? அதில் உள்ள புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருளா? ஒரு சில வெப்ப நிலையில் விஷமாக மாறுகிறதா? நுரையீரலை நேரடியாக பாதிக்கிறதா? அல்லது ரத்த ஓட்டத்தில் கலந்து இறப்பை ஏற்படுத்துகிறதா? என்ற எந்தக் கேள்விக்கும் விடை தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆனால், புகைப்பான்கள் தொடர்புடைய காரணம்தான் என திட்டவட்டமாகக் கூறும் அத்துறையினர், மக்கள் விழிப்போடு இருக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

1116 total views