பழமையான மாளிகையை புனரமைக்கும் ஈராக் தொல்லியல் துறை

Report

எகிப்து நாட்டில் இந்திய கட்டிடக்கலையை தழுவி கட்டப்பட்டுள்ள 100 ஆண்டுகள் பழமையான மாளிகையை புனரமைக்கும் பணிகளில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தனது வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு ஓய்வு பெற எண்ணிய பெல்ஜியம் நாட்டை சேர்ந்த செல்வந்தர் எட்வர்டு எம்பைன், எகிப்தின் கெய்ரோ மாவட்டத்தில் இந்த மாளிகையை நிறுவினார்.

இந்திய கட்டிடக்கலையை தழுவி இரண்டு தளங்களுடன், 1911ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை, அரிதான சிலைகள், மற்றும் சிற்பங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நூறாண்டுகளை கடந்தும் பிரம்மாண்டமாக நிற்கும் மாளிகையை, எகிப்து தொல்லியல் துறையினர் தற்போது புனரமைத்து வருகின்றனர். இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாளிகையின் பழமையும், தொன்மையும் மாறாத வகையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த 3 மாதங்களில் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மாளிகைக்கு பூசப்பட்டுள்ள வண்ணம், அதன் தொன்மையை குலைப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

823 total views