அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம் ..!

Report

அமெரிக்காவில், பயணிகளுடன் புறப்பட்ட விமான இன்ஜினிலிருந்து எண்ணெய் கசிந்து, கேபினுக்குள் புகை பரவியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாந்து விமான நிலையத்திலிருந்து, ஹவாய் நோக்கி 244 பேருடன் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் தரையிறங்க 20 நிமிடமே இருந்த நிலையில், இன்ஜினிலிருந்து எண்ணெய் கசிந்தது.

மேலும் பயணிகள் இருந்த கேபினுக்குள் புகைப்பரவி பிளாஸ்டிக் எரிவது போன்ற துர்நாற்றம் வீசியது. இதனால் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஹொனலூலூ((Honolulu)) விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, விமானம் தீப்பற்றி எரிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறி விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டுகோள் விடுத்தார்.

அதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, அவசர சூட் என்றழைக்கப்படும் அவசர வழி திறக்கப்பட்டு பயணிகள் அது வழியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் தீவிபத்தை தடுக்கவும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

விமானத்திலிருந்து இறங்கிய 177 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டநிலையில், மூச்சு திணறலால் அவதியுற்ற 11 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், உயர் சிகிச்சைக்காக 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்ஜின் வழியாக எண்ணெய் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

1435 total views