அதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..!

Report

தனது கணவர் தன் மீது காட்டும் அதீத அன்பையே காரணம் காட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

ஃபுஜைராஹ்வில் உள்ள சரியாஹ் நீதிமன்றத்தை திருமணம் ஆகி ஓர் ஆண்டு மட்டுமே ஆன பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நாடி உள்ளார்.தனது கணவனின் அதீத அன்பினால் அடைப்பட்டது போல உணர்வதாகவும் இதனால் தனது வாழ்க்கை நரகமாகிவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

தனக்காக தனது கணவர் சமைத்து கொடுத்திருப்பதாகவும், தன்னுடன் வீட்டு வேலைகளை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அந்த பெண், தங்களுக்குள் ஏதாவது பிரச்னை வரும் என்று காத்திருந்ததாகவும், ஆனால் எந்த தவறு செய்தாலும் தன்னை தனது கணவர் மன்னித்துவிடுவதோடு, பரிசுகளையும் கொடுத்துவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இது போன்று பிரச்னையே இல்லாத ஒழுக்கமான வாழ்க்கை வேண்டாம் என அப்பெண் தெரிவித்துள்ள நிலையில், விவாகரத்து வேண்டாம் என தனது மனைவிக்கு அறிவுரை கூறுமாறு அப்பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

1583 total views