ஓரிரு நாட்கள் பிரிவிலும் ஆரத்தழுவிக் கொண்ட ஆருயிர் நண்பர்கள்

Report

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஓரிரு நாட்கள் மட்டுமே பிரிந்தாலும் நண்பனைக் கண்ட உற்சாகத்தில் ஓடிச் சென்று ஆரத் தழுவிக் கொண்ட இரு குழந்தைகளின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேக்ஸ்வெல் மற்றும் ஃபின்னகன் ஆகிய இரு குழந்தைகளும் இணை பிரியாத அளவு நண்பர்கள் என இந்த வீடியோவைப் பகிர்ந்த மேக்ஸ்வெல்லின் தந்தை கூறியுள்ளார். இருவரும் உணவு, உடை, தின்பண்டம், பொம்மைகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்பவர்கள் என்றும், எப்போது சந்தித்தாலும் பொங்கி வரும் அன்பை மிகுந்த உற்சாகத்தோடு வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் தங்களது தந்தையோடு வீடு செல்லும் வழியில் எதேச்சையாக சந்தித்துக் கொண்டபோது, முந்தைய சந்திப்பு நடந்து ஓரிரு தினங்களே ஆன போதிலும், ஆர்வத்தோடு ஓடிச் சென்று கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற தூய நட்பை பெரியோர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். கறுப்பினப் பாகுபாடு கலாச்சாரம் அமெரிக்காவில் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகும் நிலையில் இரு இனங்களைச் சேர்ந்த குழந்தைகளும் நட்புக்கு நிறமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளதனர்.

925 total views