மரண கிணறு சாகசத்தை செய்யும் 20 வயது பெண்

Report

இந்தோனேசியாவில் மரணக்கிணறு சாகசத்தை 20 வயது பெண் துணிச்சலுடன் செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறார்.

டக்கேன்கோன் என்கிற இடத்தில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் 10 மீட்டர் உயரம் கொண்ட உருண்டை வடிவிலான மரணக் கிணற்றில் தலையில் ஹெல்மெட் அணியாமல் ஹிஜாப் வகை துணி ஒன்றை மட்டும் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வட்டமிட்டு தேவி அப்ரிலியானி என்கிற பெண் சாகசம் புரிகிறார்.

பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டாலும் அவர்களால் இதுபோன்ற சாகசங்களை செய்யமுடியும் என்பதை நிரூபிக்க விரும்புவதாக தேவி அப்ரிலியானி தெரிவிக்கிறார். 3 ஆண்டுகளக இந்த சாகசத்தை செய்துவருவதாக கூறும் அவர், தற்போது மரணக்கிணற்றில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்.

ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் ஆயிரத்து 500 ரூபாய் ஊதியமாக கிடைப்பதாகவும் ஒரு மாதத்திற்கு 300 நிகழ்ச்சிகள் வரை நடத்துவதாகவும் அப்ரிலியானி கூறுகிறார். கேளிக்கை பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை பொறுத்தே குடும்பத்தின் வருமானம் உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

ஊர் ஊராக சென்று கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்தில் பணிபுரியும் தனது கணவர் அஹ்மத் ஹெர்டியன்ஸ்யா தவுலே மற்றும் அவர்களது 18 மாத மகள் செரில் ஆலித்யா ஆகியோருடன் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயணப்பட்டு அப்ரிலியானி சாகசங்களை செய்துவருகிறார். பெண் ஒருவர் இதுபோன்ற சாகசத்தை செய்வதை தற்போதுதான் முதல் முறை பார்ப்பதாக பார்வையாளர்களில் ஒருவர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.

790 total views