சினிமா பாணியில் பல்லியை காப்பாற்றிய மற்றொரு பல்லி!

Report

வியட்நாமில் சுவற்றில் பிடிதவறி விழுந்த பல்லி ஒன்றை மற்றொரு பல்லி தாங்கிப் பிடித்து காப்பாற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டே நின்ஹ் ((Tay Ninh)) என்ற இடத்தில் உள்ள வீட்டில் ஜேக்கோ வகைப் பல்லிகள் வசித்து வந்தன. இந்நிலையில் ஒரு பல்லி சுவற்றில் இருந்து தவறிக் கீழே விழுந்தது.

இதனைக் கண்ட மற்றொரு பல்லி அதனைக் கவ்வி இழுத்து தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றது. இரு பல்லிகளின் எடையும் சமமாக இருந்ததால் காப்பாற்றும் முயற்சி வெகுநேரம் நீடித்தது. இறுதியில் தனது நண்பனை அந்தப் பல்லி காப்பாற்றியது.

605 total views