ஐஎஸ் தீவிரவாதிகள் மீது குண்டுகளை வீசிய அமெரிக்க விமானங்கள்!

Report

ஈராக்கை ஒட்டியுள்ள தீவுப் பகுதியில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் மீது, அமெரிக்க விமானப்படை 40 டன் அளவிற்கு குண்டுகள் வீசி தாக்கியுள்ளது.

மத்திய ஈராக்கில் ஓடும் டைகிரிஸ் நதியின் நடுப்பகுதியில் கானஸ் என்ற தீவுப் பகுதி உள்ளது. இங்கு ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து ,அங்கு விரைந்த ஃஎப் 15 மற்றும் ஃஎப் 35 ரக விமானங்கள் குறிப்பிட்ட பகுதியில் 40 டன் அளவிற்கு குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தின.

ஒருபுறம் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது, மறுபுறம் தரைவழியாக ஈராக்கிய அரசுப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் எத்தனை ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

681 total views