தாய் – மகனை கொலை செய்த நபர் 40 ஆண்டுகளுக்கு பின் கைது!

Report

நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தாய் மற்றும் அவரது மகன் உயிரிழந்தமை தொடர்பாக 77 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் புதன்கிழமை இன்வேர்னஸ் ஷெரிப் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்கொட்லாந்தின் கடற்கரை நகரான இன்வேர்னஸைச் சேர்ந்த ரெனீ மக்ரே (வயது 36) மற்றும் ஆன்ட்ரூ (வயது 3) ஆகியோர் 1976 நொவம்பர் 12 முதல் காணாமல் போயினர்.

இன்வெர்னஸுக்கு தெற்கே 12 மைல் தொலைவில் A9 வீதிக்கு அருகில் ரெனீ மக்ரேயின் கார் தீப்பிடித்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது.

ஆயினும் தாய் மற்றும் மகனின் சடலங்கள் காரில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்கொட்லாந்தின் பொலிஸ் விசாரணைக் குழுவின் துப்பறியும் அதிகாரிகளால் இன்று புதன்கிழமை காலை வடக்கு இங்கிலாந்துப் பகுதியில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

ரெனீ மற்றும் ஆண்ட்ரூ காணாமல்போய் பல தசாப்தங்களானபோதிலும் அவர்களின் இழப்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கொட்லாந்திலும் மற்றும் அதற்கு அப்பாலும் இவர்கள் காணாமல்போன விடயம் உணரப்பட்டுள்ளது.

துப்பறிவாளர்கள் கூறுகையில்; நாடு முழுவதிலுமிருந்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பல முகவர்கள் அமைப்புக்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள், 1976 முதல் இன்று வரை இந்த விசாரணையில் ஏராளமான பணிகளைச் செய்துள்ளனர்.

நாம் இந்த நிலையை அடைய அவர்களின் பணி எங்களுக்கு உதவியாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

713 total views