லண்டனில் பிக் அண்டு சீஸ் உணவகம் திறப்பு!!! சீஸ் வாடிக்கையாளர்கள் இனி குஷி!

Report

எக்ஸ்ட்ரா சீஸ் கேட்கும் வாடிக்கையாளர்களுக்காகவே சிறப்பு உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

25 வகையான சீஸ்களை ஒரே கன்வேயர் பெல்ட் மூலம் வாடிக்கையாளருக்கு வழங்கும் உலகின் முதல் உணவகம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.

சீஸ் எனும் பாலாடைக் கட்டியின் ருசிக்கு அடிமையாகாதோர் வெகு சிலரே. உணவகங்களில் விருந்துண்ணச் செல்பவர்கள் கூடுதலாக சீஸை தங்களுக்கு விருப்பமான உணவில் போட்டுத் தருமாறு கேட்டு வாங்கி ருசித்து சாப்பிடுவதுண்டு.

இதை நன்கு உணர்ந்த நிறுவனம் ஒன்று லண்டனில் பிக் அண்டு சீஸ் உணவகத்தை திறந்துள்ளது.

கான்வென்ட் கார்டனில் உள்ள செவன் டயல்ஸ் மார்க்கெட்டில் அமைந்துள்ள பிக் அண்டு சீஸ் உணவகத்தில் ஒரு கன்வேயர் பெல்டில் உலகின் பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற 25 வகையான சீஸ்களை வாடிக்கையாளர்களின் இருக்கைக்கே கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளது.

ரெட் லெய்செஸ்டர், யோக் சைர் கெனோரினோ, கார்னிஷ் கௌடா உள்ளிட்ட சீஸ் வகைகளும் இங்கு அளவில்லாமல் அள்ளிக் கொள்ளும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு விலைக்கும் ஏற்ற நிறம் கொண்ட தட்டு பெறுவோருக்கு கன்வேயர் பெல்டில் அவர்களுக்கேற்ற சீஸ்கள் வலம் வரும்.

வேண்டிய சீஸை விரும்பி எடுத்து சுவைத்து மகிழலாம் என வாடிக்கையாளர்களுக்கு பிக் அண்டு சீஸ் நிறுவனம் முழு சுதந்திரம் அளித்துள்ளது.

738 total views