முதலையை வேட்டையாடிய ஜாக்குவார் சிறுத்தை: நொடி பொழுதில் அரங்கேறிய காட்சி

Report

பிரேசிலில் ஆற்றுக்குள் பதுங்கி கிடந்த முதலையை ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று மரத்திலிருந்து பாய்ந்து வேட்டையாடிய காணொளி வைரலாகி வருகிறது.

பிரேசிலில் உள்ள பாண்டனால் என்ற ஆற்றில் கரையிலிருந்து மரத்திற்குச் சென்ற ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று நீரில் அசைவு ஏற்பட்டதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தது. அப்போது நீருக்குள் ஒரு முதலை சென்று கொண்டிருந்ததை ஜாகுவார் கண்டது.

அவ்வளவுதான் அந்த ஜாகுவார் கண் இமைக்கும் நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திலிருந்து சீறிப்பாய்ந்து குதித்து, மறு நொடியே முதலையின் கழுத்தைப் பிடித்து இறுக்கியது. அதனைத் திமிற விடாமல் அழுத்தமாக கெட்டியாகப் பிடித்தது. முதலையால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து கரைப்பகுதிக்கு இழுத்துச் சென்ற ஜாகுவார் முதலையை தனக்கு உணவாக்கிக் கொண்டது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

6075 total views