உலகளவில் வைரலான பெங்களூரு கலைஞரின் செயலை பின்பற்றிய மெக்சிகோ!

Report

மோசமான சாலையை சுட்டிக்காட்ட நிலவில் நடப்பது போன்ற காணொளி பெங்களூருவில் வெளியிடப்பட்ட நிலையில், அதே போன்று மெக்சிகோவிலும் ஒரு காணொளி சித்தரிக்கப்பட்டுள்ளது.

பாதல் நஞ்சுண்டசாமி என்ற பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர், பெங்களூருவில் சாலைகள் மோசமாக இருப்பதையும், ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், சாக்கடைகள் மூடப்படாமல் கிடப்பதையும் குறிக்கும் வகையில் அங்கு முதலை, கடல் கன்னியை வரைந்திருந்தார்.

இதுபோன்று உள்கட்டமைப்புக்களில் பெங்களூரு மாநகராட்சியின் குறைகளை எடுத்துரைத்து வந்த அவர், தனது கற்பனையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர் போல ஆடையணிந்து மெதுவாக காலெடுத்து வைத்து நிலவில் நடந்து செல்வது போல் காணொளி எடுத்திருந்தார்.

இந்த காணொளி, பெங்களூரு சாலையில் எடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவருக்கு பல தரப்பும் பாராட்டி வந்தனர்.

இந்த காணொளி உலகளவில் வைரலானதை அடுத்து, மெக்சிகோவில் பொவேடா செலெஸ்டே என்ற அமைப்பு பாதலைத் தொடர்புகொண்டு அதேபோன்று தாங்களும் காணொளி எடுக்க விரும்புவதால் அனுமதி தருமாறு கேட்டுள்ளனர்.

இதை அனுமதித்த அவர், மெக்சிகோவில் மறு சித்தரிப்பு செய்யப்பட்ட காணொளி காட்சிகளையும் பகிர்ந்துள்ளார்.

790 total views