லண்டனில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்!

Report

லண்டனில் பட்டப்பகலில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்படும் திடுக்கிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

யூசுஃப் கரீம் ஹசான் அல் பேஜானி என்ற 17 வயது சிறுவன் தொழிற்படிப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் தெருவில் கேலி செய்த ஒரு கும்பலிடம் இருந்து தோழியைக் காப்பாற்றிய யூசுஃப் அடுத்த அரை மணி நேரத்தில் தெருவில் ஓட ஓட ஒரு ரவுடி கும்பலால் சரமாரியாகக் குத்தப்பட்டார்.

அருகில் இருந்த கே.எஃப்.சி.உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு பொலிஸார் ரவுடி கும்பலை தேடி வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூசுஃப் ஐந்தரை மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கிடுகையில் இது லண்டனில் நடைபெறும் 105-வது படுகொலையாகும்.

கடந்த 9 நாட்களில் நடந்த 7-வது கொலையாகவும் இது இருப்பதாக குற்றப்பதிவேடுகள் கூறும் நிலையில், லண்டனில் சட்டம் சீர்குலைந்து ஒழுங்கின்மை தலைவிரித்தாடுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

2487 total views