‘பீரங்கி மனிதனை புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் மரணம்

Report

சீனாவின் தியனன்மென் சதுக்க படுகொலைக்கு பிறகு, இராணுவ டாங்கிகளை தனி மனிதனாக மறித்த நபரை (ராங்க் மேன்) புகைப்படம் எடுத்த அமெரிக்க பத்திரிகையாளர் சார்லி கோல் (64), இந்தோனேசியாவின் பாலி பகுதியில் கடந்த 5ம் திகதி காலமானார்.

சீன அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் 1989ம் ஆண்டு மிகப்பெரிய மாணவர் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், 1989 செப்டம்பர் 4ம் திகதி அதிகாலையில், தியானன்மென் சதுக்கத்தை சுற்றி வளைத்த சீன இராணுவ ராங்கிகள், அங்கிருந்த மாணவர்கள் மீது குண்டுமழை பொழிந்தன. இந்தக் கொடூரத் தாக்குதலில் ஆயிரக் கணக்கான அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, அரசின் மீதான அச்சத்தில், சீனா முழுவதும் மயான அமைதி நிலவியது.

இந்த சூழலில், பெரிய அள விலான போராட்டத்தை அடக்கிய இறுமாப்புடன், அடுத்த நாள் நூற்றுக்கணக்கான சீன இராணுவ ராங்கிகள் தியனன்மென் சதுக்கம் அருகே வரிசையாக சென்று கொண்டிருந்தன.

அந்த தருணத்தில், தன்னந்தனி மனிதனாக ஒருவர், இராணுவ ராங்கிகளை வழிமறித்து நின்றார். ராங்கிகளின் மிரட்டல் எச்சரிக்கை ஒலியை சிறிதும் அசட்டை செய்யாமல், கை களில் வெறும் காய்கறிப் பைகளை ஏந்தியபடி நின்றார் அந்த சாமானியன். இந்தக் காட்சியை கண்ட அங்கிருந்த அமெரிக்க பத்திரிகையாளர்கள் 5 பேர் உடனடியாக அதை தங்கள் கமராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சில நாட்கள் கழித்து சீனாவை தவிர பெரும்பாலான நாடுகளின் பத்திரிகைகளில் இந்தப் புகைப்படம் பிரசுரமாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சர்வாதிகாரத்துக்கு எதிராக போராடுவதற்கான புதிய உத்வேகத்தை இப்புகைப்படம் வழங்கு வதாக பிரபல பத்திரிகைகள் கட்டுரை வரைந்தன.

ராங்கிகளை மறித்த அந்த ஒற்றை மனிதன் குறித்த எந்த விவரமும் தெரியாததால், அவரை ‘ராங்க் மேன்’ என பத்திரிகைகள் வர்ணித்தன.

1546 total views