ஆஸ்திரேலியாவில் முதியவர் ஒருவர் மிதிவண்டி ஓட்டிக்கொண்டிருந்தபோது, தன்னை பறந்து தாக்க வந்த பறவையிடமிருந்து தப்பிக்க முயன்றபோது விபத்தில் சிக்கி இறந்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்துக்கு அருகிலுள்ள பூங்கா ஒன்றின் வேலியில் மிதிவண்டி மோதியதில் தலையில் காயமடைந்த 76 வயதான அந்த முதியவரின் உயிரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இளவேனிற்காலத்தில் மேக்பை எனும் இந்த வகை பறவைகளின் தாக்குதலால் மிதிவண்டி ஓட்டுபவர்கள், பாதசாரிகள் ஆகியோருக்கு காயங்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என்ற போதிலும், மிகவும் அரிதாகவே உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய சம்பவங்கள் நிகழ்கின்றன.