கனடாவில் அம்பாசிடர் பாலத்தின் மீது ஏறியவருக்கு நேர்ந்த கதி!

Report

ஒன்ராறியோவின் வின்ட்சர் பகுதியையும், மெச்சிகனின் டிரொயிட் பகுதியையும் இணைக்கும் அம்பாசிடர் பாலத்தின் மீது பதாதை ஒன்றினைக் கட்டுவதற்காக ஏறிய ஆண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

188 மீட்டர் உயரமான அந்த பாலக் கட்டுமானத்தின் தென் பகுதியில் ஒருவர் ஏறிக்கொண்டிருப்பதை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று அவர் கீழே இறங்கி வரும் வரை காத்திருந்த அதிகாரிகள், அவர் கீழே இறங்கியதும் கைது செய்துள்ளனர். அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

423 total views