கரை ஒதுங்கி உயிருக்கு பேராடிய டால்பின்கள்!

Report

கரை ஒதுங்கி உயிருக்கு போராடிய டால்பின்கள் மீட்கப்பட்டு கடலில் விடப்பட்டன

சிலியில் கடற்கரையோரம் ஒதுங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 டால்பின் மீன்கள் மீட்கப்பட்டு, மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விடப்பட்டன.

லாஸ் ரியாஸ் பிராந்தியத்திலுள்ள கோர்ரல் எனுமிடத்தில் உள்ள கடற்கரையோரத்தில் 2 டால்பின் மீன்கள் கரை ஒதுங்கிய நிலையில் கிடந்தன.

அந்த 2 டால்பின் மீன்களும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து உள்ளூர் மக்கள், பொலிஸார் உள்ளிட்டோருடன் சேர்ந்து டால்பின்களை மீட்டனர்.

பின்னர், ஸ்ட்ரெச்சர் அமைத்து அதில் 2 மீன்களையும் ஏற்றி தூக்கிச் சென்று கடலுக்குள் விட்டனர். உயிர் பிழைத்த டால்பின் மீன்கள் கடலுக்குள் சென்றன.

263 total views