அவுஸ்திரேலியாவில் மக்களை அச்சுறுத்தும் அதிர்ச்சி விளம்பரங்கள்!

Report

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருப்பிடமற்றவர்களிற்கு தங்குவதற்கு இடமளிக்கப்படும் ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக பாலியல் உறவிற்கு இணங்கவேண்டும் என வெளியாகியுள்ள இணைய விளம்பரங்கள் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான பல விளம்பரங்களை அவதானித்துள்ளதாக ஏபிசி -அவுஸ்திரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தங்குவதற்கு இடமளிக்கப்படும் அதற்கு பதில் ஓர் இரவிற்கோஅல்லது தொடர்ச்சியாகவோ பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு சம்மதிக்கவேண்டும் என கோரும் பல விளம்பரங்களை பார்க்க முடிந்துள்ளது என ஏபிசி தெரிவித்துள்ளது.

ஆண்களும், பெண்களும் இவ்வாறான விளம்பரங்களை வெளியிடுகின்றனர் என ஏபிசி தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்கள் வாடகைகள் எப்படி இளைஞர் யுவதிகளினால் சமாளிக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன என்பதை புலப்படுத்துகின்றன என செல்ட்டர் சௌத் அவுஸ்திரேலியா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

447 total views