இந்தோனேஷியாவில் காட்டுத் தீ காரணமாக 200 பேர் கைது!

Report
6Shares

இந்தோனேஷியாவின் மழைக் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 200 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காட்டுத் தீ விபத்து விவசாயத்திற்காக காடுகளை சட்டவிரோதமாக எரிப்பதனால் ஏற்படுகிறது.

இது குறித்து, இந்தோனேஷிய பொலிஸார் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோ போன்ற பகுதிகளிலேயே கடந்த சில நாட்களாக இந்த கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு மற்றும் உடல்நலம் பாதிப்பு போன்றவை ஏற்படும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 இராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டன.

5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டன என்றும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காட்டுத் தீ தொடர்பாக மலேசியாவும், இந்தோனேசியாவும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

311 total views