கரடிக்குப் பிடித்த தேன் சுவை! உலகிலேயே அதிக விலையாம்?

Report

துருக்கியில் தேனீ வளர்ப்பவர் ஒருவர் வனக்கரடிகளுக்குப் பிடித்த தேன் சுவை எது என்பதை அறிய ஆய்வு மேற்கொண்ட போது, உலகிலேயே அதிக விலை கொண்ட தேனையே கரடிகள் சுவைத்து மகிழ்ந்ததாகக் கூறி அதன் சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளார்.

ட்ரப்ஸான் என்ற பகுதியில் தேனீ வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டள்ள இப்ராஹிம் செடஃப், தனது தேனீக்களின் பண்ணையில் அவ்வப்போது ஊடுருவி நாசம் செய்யும் கரடிகளின் காட்சியை வெளியிடுவார்.

இந்நிலையில், கரடிக்குப் பிடித்த தேன் என்ன ரகம் எனக் கண்டறிய விருப்பப்பட்டார். பின் ஒரு மேஜையில் பல வகையான தேன்களையும், ஒரு இடத்தில் செர்ரி ஜாமையும் வைத்து, அந்த பாத்திரத்தில் தேன் ரகத்தின் பேரையும் குறிப்பிட்டிருந்தார்.

பின் அதற்கு அருகே சிசிடிவி கேமராவைப் பொருத்திய நிலையில் அங்கு வந்த கரடிகள் ஒவ்வொரு வகை தேனையும் ருசி பார்த்தன. பின் ஆன்ஸெர்ஸ்கி என்ற உலகிலேயே அதிக விலையாகக் கருதப்படும் தேனை கரடிகள் ருசித்து சாப்பிட்டதைக் கண்டார்.

குழந்தையைப் போல தன் நீண்ட நகத்தில் ஒட்டிய தேனையும் விடாமல் ஒவ்வொன்றாக ரசித்து சுவைத்த அழகைப் பார்த்ததும், அவை தன் தேன் பண்ணையில் ஏற்படுத்திய சேதத்தை மறந்தே விட்டதாகவும், இப்ராஹிம் குறிப்பிட்டார். அந்த கரடி விரும்பிச் சுவைத்த தேன் ஒரு ஜார் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் விலை கொண்டதாகும்.

545 total views