திடீரென தரையிறப்பட்ட வியூலிங் விமானம்! பீதியில் உறைந்த பயணிகள்

Report

மலாகாவில் இருந்து பார்சிலோனா புறப்பட்ட விமானம் அவசர தரையிறக்கம்

ஸ்பெயினின் மலாகாவில் இருந்து பார்சிலோனா புறப்பட்ட வியூலிங் விமானத்துக்குள் புகை வந்ததையடுத்து அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

கடந்த வாரம் நள்ளிரவில், வியூலிங் VY2118 என்ற விமானம் மலாகாவில் இருந்து பார்சிலோனா புறப்பட்டது.

பார்சிலானோவில் எல் பிராட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்கள் இருக்கும் போது விமானத்துக்குள் திடீரென கரும்புகை சூழத் தொடங்கியது.

இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்து போயினர். அப்போது விமானக்குழுவினர் தங்களை மூக்கை கையால் மூடிக்கொண்டு தலையை தாழ்த்தி அமருமாறு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததும் அந்த விமானத்துக்கு முன்னுரிமை கொடுத்து தரையிறக்கப்பட்டது.

இருப்பினும், விமான நிலைய தரப்பிலோ, வியூலிங் விமான நிறுவனத்தரப்பிலோ யாரும் உதவ முன்வரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

ரியான் ஏர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் இருவர் அங்கு பயணிகளாக வந்ததாகவும், அவர்களும், சக பயணிகளும் உதவியதை அடுத்து பக்கவாட்டு பாதுகாப்பு சறுக்கல் உதவியுடன் அவசர அவசரமாக தரையிறங்கியதாகவும் குறிப்பிட்டனர்.

அது குறித்த ஒரு காணொளி முன்பக்க இடதுபுற பக்கவாட்டு பாதுகாப்பு சறுக்கல் காற்றில் பறப்பதும், அதன் வழியே வெளியேற யாரும் உதவாததால், பின்புறம் வழியாகவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகள் சறுக்கி வந்து தப்பும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

1247 total views