பொலிஸ் அதிகாரியை கொடூரமாக கொலை செய்த நால்வர்! விசாரணையில் வெளிவந்த உண்மை

Report

ஓகஸ்ட் மாதம் பெர்க்ஷயரில் கொலை செய்யப்பட்ட புதிதாக திருமணமான பொலிஸ் அதிகாரியின் கொலையுடன் தொடர்புடைய நாள்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி பொலிஸ் அதிகாரியான அண்ட்ரூ ஹார்பர் பெர்க்ஷயரில் உள்ள சுல்ஹம்ஸ்டெட் கிராமத்திற்கு அருகே ஒரு காரால் இழுத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கொள்ளை சம்பவமொன்று தொடர்பாக விசாரணையில், ஈடுபட்டிருந்த 28 வயதான அண்ட்ரூ ஹார்பரின் கொலையுடன் தொடர்புடைய நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

100 பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகளைத் தொடர்ந்து 17, 18, 20 மற்றும் 21 வயதான நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

456 total views