ஹாங்காங்கில் கோரா விபத்து - 8 பேர் படுகாயம்!

Report

ஹாங்காங்கில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். கவ்லூன் அருகே உள்ள ஹங் ஹோம் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் திடீரென தடம் புரண்டது.

இதையடுத்து, ரயில் நிறுத்தப்பட்டதும் சுமார் 500 பயணிகள் பதற்றத்துடன் கீழே இறங்கினர். இருப்பினும் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.

முந்தைய காலங்களில் ஹாங்காங்கில் ரயில் விபத்துக்கள் அரிதாகவே நடந்துள்ளன. கடந்த 4 மாதங்களாக நடைபெறும் போராட்டங்களுக்கு ரயில்நிலையங்களும் தாக்குதலுக்கு ஆளாகின.

தண்டவாளங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த விபத்துக்கும் அது போன்ற செயல் காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது.

ரயில்வே நிர்வாகத் தலைவர் நடந்த விபத்துக்கு பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார். தண்டவாளமும் சீர் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

292 total views