துபாய் விமான நிலையத்தில் 5-வயது குழந்தைக்கு நேர இருந்த கதி! காப்பாற்றிய அதிகாரிகள்

Report

துபாய் விமானநிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பயணி ஒருவரின் பையில் 5-வயது குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மீட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த காணொளியில், விமானநிலையத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, பயணி ஒருவரின் துணிகள் மற்றும் பொருட்கள் வைக்கும் பையை சோதித்துள்ளனர்.

அப்போது, உள்ளே குழந்தை ஒன்று அழாமல் சிரித்த படி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது துபாய் விமானநிலையத்தில் நடந்துள்ளது.

ஆனால், குழந்தையௌ பாகிஸ்தான் நாட்டில் இருந்து விமானம் வழியாக குழந்தையை கடத்தி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2032 total views