தத்தளிக்கும் விமான நிறுவனங்கள்! காரணம் இது தான்..

Report

சமீபத்தில் சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலினால் உலகத்தின் மொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் சுமார் 5 % குறைந்ததாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இப்படி உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் வரத்து குறைந்து இருப்பதால், உலக நாடுகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொதுவாக பயன்படுத்தும் பெட்ரோல் டீசல் மற்றும் கச்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை எரிபொருளின் விலையும் உயர்ந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சவுதி அரேபியா எண்ணெய் நிறுவனத்தில் நடந்த தாக்குதலினால், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் டீசலின் விலை சுமார் இரண்டு ரூபாய் ஐம்பது பைசா வரை உயர்ந்து இருப்பதையும் செய்திகளில் பார்க்க முடிகிறது.

இப்படி இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் தொடங்கி கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தும் எரிபொருளின் விலை உயர்ந்ததற்கு நாம் எத்தனை வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம்மை விட இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்கள் அதிகமாக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். காரணம் விமான எரிபொருளின் விலை ஏற்றம் இது தொடர்பில் உலக மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

5160 total views