வெளிநாட்டில் பெண்மணி ஒருவரை சுட்டுக் கொலை செய்யும் பதற வைக்கும் வீடியோ

Report

இஸ்ரேலிய படையினர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொள்ள முயன்ற பாலஸ்தீன பெண்ணொருவரை சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேற்குகரைக்கும் ஜெரூசலேத்திற்கும் இடைப்பட்ட காவலரணில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகத்தினால் படுகாயமடைந்த பெண் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மிக அருகிலிருந்து பாலஸ்தீன பெண்ணை இஸ்ரேலிய படையினர் சுடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதேவேளை எந்த காரணமும் இன்றி ஆபத்தான நடவடிக்கை எதிலும் ஈடுபடாத பெண்ணை இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என பாலஸ்தீன செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தினால் காயமடைந்த பெண் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டார் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டவேளை உயிரிழந்தார் என பாலஸ்தீன செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

காயங்கள் காரணமாகவே குறித்த பெண்மணி உயிரிழந்துள்ளார் என்பதை பாலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட பெண்மணி எச்சரிக்கையை பொருட்படுத்தாது கத்தியுடன் காவலரணை நோக்கி வந்தார் இதன் பின்னர் காலில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது என இஸ்ரேலிய காவல்துறையினர் அந்த பெண்மணி வைத்திருந்தாக தெரிவித்து கத்தியொன்றையும் காண்பித்துள்ளனர்.

17996 total views