வெடிகுண்டு இருப்பதாகப் பொய்யுரைத்தவர் சிக்கினார் !!

Report

மலேசியாவின் சரவாக் மாநிலத்திலுள்ள மிரி விமான நிலையத்தில், தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகப் பொய்யுரைத்த 28 வயது ஏர்ஏஷியா பயணியை போலிசார் கைது செய்துள்ளனர்.

காலை 8 மணி வாக்கில் தனது பயணப்பெட்டிகளைப் பதிவு செய்துகொண்டிருந்த அந்தப் பயணி, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக ஏர்ஏஷியாவின் முகப்புப் பணியாளரிடம் தெரிவித்தார். ஏர்ஏஷியா அதிகாரி ஒருவர் இதுகுறித்து உடனே போலிசாரிடம் தெரிவித்ததாக த ஸ்டார் பத்திரிகை தெரிவித்தது.

அந்த ஆடவரைச் சோதனை செய்த போலிசார், அவரிடம் எந்த வெடிகுண்டும் இல்லை என்று உறுதி செய்த பிறகு அவரைக் கைது செய்தனர்.

638 total views