ஜகார்த்தாவில் காரில் தொங்கிய பொலிசார்!!

Report

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் காவலர் ஒருவர் கார் ஒன்றின் முன்புறக் கண்ணாடியின் மீது தொங்கியவாறு சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஜாலான் புசார் மிங்கு ராயா பகுதியில் செப்டம்பர் 16ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமாக கார் நிறுத்தப்பட்ட இடங்களை போலிஸ் அதிகாரி இப்ரிக் ஈகா செடியாவான் மற்றும் சவுத் ஜகார்த்தா டிரான்ஸ்பொர்டேஷன் ஏஜென்சியைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஆகியோர் சோதனையிடச் சென்றனர்.

அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கருஞ்சாம்பல் நிற கார் ஒன்றை அணுகிய போலிசார் அதன் ஓட்டுநரான டவிபுதீனிடம் வண்டியின் ஆவணங்களைக் கோரினர்.அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க மறுத்த அவர், அங்கிருந்து தப்ப முயற்சி செய்தார்.

788 total views