
அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் ஜான் பால்டன். அவர் சிறப்பாக செயல்படவில்லை எனக்கூறி, பதவியில் இருந்து அதிபர் டிரம்ப் நீக்கினார். இந்நிலையில், புதிய ஆலோசகராக ராபர்ட் சி.பிரையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், ராபர்ட் சி. பிரையனுடன் நீண்ட நாட்கள் பணியாற்றி உள்ளதாகவும், அவர் சிறப்பாக பணியாற்றுவார் எனவும் கூறியுள்ளார்.