வாஷிங்டன் சாலையில் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம்! பலர் காயம்

Report

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், மிகவும் பரபரப்பான சாலை கொலம்பியா சாலை. வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள இந்த பகுதியில் நேற்று இரவு நடந்து சென்றவர்கள் மீது திடீரென மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதனால் நடந்து சென்றவர்கள் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும், ஏராளமான பொலிஸார் மற்றும் துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது தெரு சந்திப்பில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

அப்பகுதி முழுவதையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2556 total views