அழியும் நிலையில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட பவளப்பாறைகள்?

Report

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் அழியும் நிலையில் இருந்த பவளப்பாறைகளை மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 1980 முதல் 1990ம் ஆண்டுவரை அந்நாட்டு கடல்வளத்தில் இருந்த பவளப்பாறைகள் 85 விழுக்காடு வரை அழிக்கப்பட்டன.இதன் காரணமாக கடல் உணவைச் சார்ந்திருந்த குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக மீன் உற்பத்தியிலும், வாழ்விடத்திலும் பெரும்பங்காற்றும் பவளப்பாறைகளை மீண்டும் வளர்க்க அந்நாட்டு அரசு தீவிரம் காட்டியது.

இதனையடுத்து, கடலுக்குள் ஆங்காங்கே இருந்த சிறிய அளவிலான பவளப்பாறைகளை ஒன்றிணைத்து குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்த பின்னர், கடலில் பல்வேறு இடங்களில் பராமரிக்கப்படுகின்றன.

அரசின் இந்த செயலைத் தொடர்ந்து அந்நாட்டில் அழிவின் விளிம்பில் இருந்த பவளப்பாறைகள் பெருமளவு வளர்ந்துள்ளன.

இதனால், வெப்பமண்டல நீரோட்டத்தில் வளரும் மீன்கள் அங்கு வரத் தொடங்கியிருப்பதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை சீரடையும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

710 total views