தங்களைத் தாக்கினால் முழு அளவிலான போர் வெடிக்கும் - ஈரான் எச்சரிக்கை

Report

சவுதி எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்ட விஷயத்தில் தங்களைத் தாக்கினால் முழு அளவிலான போர் வெடிக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஷெரீப் கூறும்போது, பிரச்னையைத் தீர்க்க முடியும் என தாங்கள் நம்புவதாகக் கூறினார்.

மேலும் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இருக்கும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளமுடியும் என்று கூறிய அவர், ஆனால் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சவுதியின் எண்ணெய் கிணறுகள் தாக்கப்பட்ட விஷயத்தில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக மறுத்த ஷெரீப், தங்கள் மீது போர் வலியத் திணிக்கப்பட்டால் அது முழு அளவிலான போராக இருக்கும் என்று கூறினார்.

1378 total views