பெற்றோர் கண்டித்ததால் 8 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

Report

உக்ரைன் நாட்டில் தினசரி பெற்றோரிடம் அடிவாங்கிய 8 வயது சிறுவன் 9 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

தலைநகர் கிவ் நகரத்தில் உள்ள ஆன்டன் என்ற அந்தச் சிறுவனை, அவனது பெற்றோர் காரணமின்றி அடிக்கடி அடித்து வந்ததாக பக்கத்து வீட்டினர் பொலிஸ் தெரிவித்தனர்.

நிகழ்தினத்தன்று, துணி கிழிந்தது தொடர்பாக ஆன்டனின் தாயும், தந்தையும் மாறி அவனை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தச் சிறுவன் 9வது மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது.

படுகாயங்களுடன் கிடந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆன்டன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுவனின் பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

4298 total views