குளியல் தொட்டி வரை செல்போன் கொண்டு சென்ற பெண் மரணம்.. இதுதான் காரணம்!

Report

குளியல் தொட்டியில் குளிக்கும் பொது, சார்ஜ் செய்து வைத்த செல்போன் விழுந்ததால், ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த எல்ஜினியா என்ற பெண். இவர் சம்பவத்தன்று, தனது கைபேசியுடன் குளியலறைக்கு சென்றுள்ளார்.

குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள மின் இணைப்பில் தனது கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு, குளிக்க தொட்டிக்குள் இறங்கினார்.

அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரின் கைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எல்ஜினியாவின் இறப்பு, அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

6455 total views