மயிரிழையில் விபத்திலிருந்து தப்பிய விமானங்கள் - நடந்தது என்ன?

Report

ஒன்றன் மீது ஒன்றாக வந்துள்ள இரண்டு விமானங்கள் ஐந்து வினாடிகளில் விபத்திலிருந்து, தப்பிய சம்பவம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

தரைக் கட்டுபாட்டு குழுவினரால் அவை விபத்துக்குள்ளாமல் காப்பாற்றப்பட்டுவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு செஸ்னா 208 விமானங்கள் மயிரிழையில் விபத்துக்குள்ளாகாமல் தப்பின என ஏர்ப்ராக்ஸ் போர்டு கூறியுள்ளது.

பீட்டர்போரஃப் அருகே சிப்சன் விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்க தயாரானபோது, அடுத்த விமானத்தை மாணவர் ஒருவர் பயிற்சியாளரின் உதவியால் ஓட்டி வந்துள்ளார்.

இரண்டு விமானங்களும் ஒன்றன் மீது ஒன்றாக வந்துள்ளது என தெரிகிறது. மேலே இருந்த விமானத்திடம் தரைக்கட்டுபாட்டு குழு விமானத்தை தரையிறக்கும் முன்பு சுற்றி வரக் கூறியுள்ளது.

இதை விசாரித்த ஏர்ப்ராக்ஸ் போர்டு, தரையிறங்க தயாரான விமானம் மற்றொரு விமானத்தில் இருந்து 50 அடி அதாவது 15 மீட்டர் தொலைவில் இருந்து உள்ளது என்பதை கண்டறிந்துள்ளது.

இந்த சத்தத்தைக் கேட்ட பயிற்சியாளர், மேலிருக்கும் விமானத்தின் நிழலைப் பார்த்துவிட்டு மாணவரிடமிருந்து கட்டுபாட்டை வாங்கிக் கொண்டார்.

மேலிருக்கும் விமானம் இன்னும் ஒரு சுற்று வர வேண்டும் என தரைக்கட்டுபாட்டு குழுவில் இருந்த ஒருவர் கூறியுள்ளார்.இரண்டு விமானிகளுக்கும் இன்னொரு விமானம் எங்கிருக்கிறது என்பது பற்றி தெரியாது.

ஒரு விமானத்தை சுற்ற சொல்லவில்லையென்றால் ஐந்து விநாடிகளில் ஒன்றோடு ஒன்று மோதி இருக்கும் என தரைக்கட்டுபாட்டு குழுவில் இருந்தவர் கூறினார். இதனால், நடுவானில் நடக்கவிருந்த மோதல் தவிர்க்கப்பட்டது என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

7343 total views