78 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்துவதற்கு இத்தாலி முடிவு

Report

கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க இத்தாலி முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் அதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இப்போது இத்தாலி கீழ் அவையில் 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும்.

இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை , இத்தாலியின் இச்செயலானது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் செயல் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

882 total views