ஜேர்மனியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கரம்

Report

நேற்று ஜேர்மனியில் சிரிய பிரஜையொருவர் சாரதியை இழுத்துவிழுத்திவிட்டு டிரக்கொன்றை எடுத்துச்சென்று பல கார்களின் மீது மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதால் இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாகயிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட நபர் டிரக்கினை திருடி கார்களின் மீது மோதினார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

ஜேர்மனியின் லிம்பேர்க் நகரில் முக்கிய புகையிரத நிலையத்திற்கு முன்னாள் நின்றிருந்த கார்களின் மீது மேர்சிடஸ் ரக வாகனத்தை பயன்படுத்தி நபர் ஒருவர் மோதினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

32 வயது சிரிய பிரஜையே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர் கடந்தகாலங்களில் தாக்குதல்கள் பாலியல்ரீதியிலான சம்பவங்கள் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டவர் ஆனால் தீவிரவாத தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிரக் சாரதியை வெளியே இழுத்துவிழுத்தி விட்டு அந்த டிரக்கை செலுத்தி சென்ற நபர் அதனை பயன்படுத்தி கார்களின் மோதினார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை டிரக்சாரதி உறுதிசெய்துள்ளார்.

30 வயது மதிக்கதக்க தாடியுடன் காணப்பட்ட நபர் சாரதியின் பக்கமாக வந்து என்னை கீழே இழுத்து விழுத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் உனக்கு என்னவேண்டும் என கேட்டேன் அதற்கு அவர் பதில் சொல்லவில்லை என டிரக் சாரதி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் அந்த நபர் டிரக்கினை கார்கள் நின்றிருந்த பகுதிக்கு செலுத்தி அவற்றின் மீது மோதியுள்ளார்.

குறிப்பிட்ட நபர் பின்னர் சிதைந்த வாகனத்திலிருந்து வெளியே வந்தவேளை தாங்கள் அவரிற்கு முதலுதவி வழங்கியதாக பலர் தெரிவித்துள்ளனர்.

அவர் அல்லா என தெரிவித்தார் அராபிய மொழியில் ஏதோ சொன்னார் என அப்பகுதியில் காணப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் காவல்துறையினர் இதனை உறுதி செய்ய மறுத்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வசிக்கும் ஒருவர் பாரிய சத்தம் கேட்டதும் வீதிக்கு வந்தவேளை நபர் ஒருவர் மரத்தின் கீழ் இருப்பதை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.

அவரின் மூக்கிலிருந்து குருதி வெளியேறிக்கொண்டிருந்தது, கைகளில் காயங்கள் காணப்பட்டன, உடைகள் கிழிந்துகாணப்பட்டன,நான் அவரிடம் உங்கள் பெயர் என்னவென கேட்டதற்கு அவர் முகமட் என தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் குறித்து ஊகங்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என சமூக ஊடகங்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

9747 total views