துருக்கி படையினர் எந்நேரத்திலும் சிரிய எல்லையை கடக்கலாம்-முக்கிய அதிகாரி

Report

துருக்கியின் இராணுவத்தினர் கிளர்ச்சிகுழுவொன்றுடன் இணைந்து வெகுவிரைவில் சிரியாவிற்குள் நுழையவுள்ளனர் என துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகனின் சகாவொருவர் தெரிவித்துள்ளார்.

துருக்கி இராணுவத்தினர் சுதந்திர சிரிய இராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவுடன் இணைந்து எல்லையை கடக்கும் என பஹ்ரெட்டின் அல்டுன் தெரிவித்துள்ளார்.

துருக்கி மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் ஆயுதகுழுக்களின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதுமே சிரியாவின் வடகிழக்கு பகுதியில் துருக்கி மேற்கொள்ளவுள்ள நடவடிக்கையின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குர்திஸ் வைபிஜி ஆயுத குழுவை சேர்ந்தவர்கள் தமது அமைப்பிலிருந்து தப்பிச்செல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

7170 total views