ரஷ்ய சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உலகம் பார்த்திராத அதிசயம்...!

Report

ஒரு வைரத்துக்குள் (Diamond) இன்னொரு வைரம் இருக்கும் வகையிலான அரியவகை வைரக் கல் ஒன்று ரஷ்ய (Russia) நாட்டின் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் சைபிரியாவுக்கு உட்பட்ட இடத்தில் அந்நாட்டு அரசுச் சுரங்க நிறுவனம் குறித்த வைரத்தைக் கண்டறிந்துள்ளது.

இந்த அரியவகை வைரக் கல், 80 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கபட்ட வைரத்தின் வெளிப்புறம், 0.62 காரட் எடையும், உள்ளே இருக்கும் சிறிய வைரம் 0.02 காரட் எடையும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களுக்குத் தெரிந்த வரையில் இதைப் போன்ற ஒரு வைரத்தை உலகில் எங்குமே இதுவரை கண்டுபிடித்தது இல்லை என்றும் இது இயற்கையின் மிக அரிய படைப்பு எனவும் சுரங்கத் தரப்ப்பினர் வியந்து கூறியுள்ளது.

அத்துடன் இந்த வைரத்தைப் பொறுத்தவரை, உள்ளே இருக்கும் சிறியது முதலில் உருவாகியிருக்கும் என்றும், அதன் பிறகுதான் வெளியே இருக்கும் பெரிய வைரக்கல் வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் இரு வைரத்துக்கும் இடையில் ஒரு சிறிய வெற்றிடம் உள்ளது. அது எப்படி உருவானது என்பதுதான் தற்போது விஞ்ஞானிகளுக்கே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ள நிலையில் அது குறித்து அடுத்தடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றதகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2898 total views