சீன மருத்துவமனையில் தீ - பரிதாபமாக உடல்கருகி ஐவர் பலி

Report

சீனாவின் அன்குய் மாகாணத்தில் உள்ள போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ள ஒரு டவுன்ஷிப் சுகாதார மையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த மீட்பு பணியின்போது இதுவரை 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்

பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

633 total views