ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு - 4 பேர் கவலைக்கிடம்!

Report

ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பொலிஸார் பலியாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தின் கிரேஷாக் மாவட்டத்தில், நேற்று சாலை ஓரத்தில் நின்ற பொலிசாரின் வாகனத்தின் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பில் ஒரு காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

652 total views