நாடு திரும்பிய 1000க்கும் மேற்பட்ட சிரிய அகதிகள்!

Report

ஜோர்டான் மற்றும் லெபனான் போன்ற நாடுகளிலிருந்து 1000க்கும் அதிகமான சிரிய அகதிகள் மீண்டும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ரஷ்யா மற்றும் அகதிகள் கண்காணிப்பு அமைப்பு தரப்பில், கடந்த 24 மணிநேரத்தில் லெபனான் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

இதில், லெபனான் நாட்டிலிருந்து 142 பெண்களும் , 242 குழந்தைகளும் திரும்பியுள்ளனர். ஜோர்டானிலிருந்து வந்த பெண்கள் எண்ணிக்கை 221. குழந்தைகளின் எண்ணிக்கை 376 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் போரின் சூழல் சற்று குறைந்திருப்பதால் வேறு நாடுகளுக்குச் சென்ற சிரிய மக்கள் நாடு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

இதில், ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைசி இடமான இட்லிப்பில் ரஷ்யா மற்றும் சிரிய அரசுப் படைகள் தங்கள் தாக்குதலை அதிகரித்துள்ளன.

946 total views