குளிர்காலத்தை எதிர்நோக்க கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் கிரிஸ்லி கரடிகள்!

Report

குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில் அலாஸ்காவில் உள்ள கிரிஸ்லி பழுப்புக் கரடிகள் தங்கள் உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் ஏராளமான கிரிஸ்லி பழுப்புக் கரடிகள் வாழ்ந்து வருகின்றன. இதற்காக காட்மய் தேசியப் பூங்காவில் இவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வடதுருவத்தில் உள்ள அலாஸ்காவில் அடுத்த சில வாரங்களில் குளிர்காலம் தொடங்க உள்ளது. இதனால் கிரிஸ்லி கரடிகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடலில் கொழுப்புச் சத்தை சேகரித்துக் கொள்ளும்.

பின்னர், வளை தோண்டி அதனுள் நீண்ட உறக்கத்தை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள கொழுப்பு கரைந்து அதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.

இதன் காரணமாக தற்போதே அந்தக் கரடிகள் ஏராளமான சால்மன் மீன்களை சாப்பிட்டு வருகின்றன.

இவற்றில் குயின் ஆப் கார்புலன் என்று பெயரிடப்பட்ட கரடி ஒன்று கடந்த ஜூலை மாதம் பார்க்கப்பட்டதை விட தற்போது 3 முதல் 4 மடங்கு வரை உடல் எடை அதிகரித்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

988 total views