200க்கும் அதிகமான பெண்களை ஆபாசக் காணொளி எடுத்த நபருக்கு சிறை!

Report

லிங்கன் ஷெ குவொக் மிங் பெண்களை ஆபாசமான முறையில் 211 காணொளிகளை எடுத்திருக்கிறார்.

2016 பிப்ரவரியிலிருந்து 2017 நவம்பர் வரை 313@Somerset, Bugis+, Junction 8 உள்ளிட்ட இடங்களில் அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவரால் இறுதியில் பிடிபட்டார் லிங்கன். அவருடைய குற்றங்களுக்காக 36 வயது லிங்கனுக்கு 33 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பெண்களை அவமதித்த 10 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் லிங்கன். அவருடைய தண்டனையை நிர்ணயிக்க மேலும், 201 குற்றச்சாட்டுகள் கருத்திற்கொள்ளப்பட்டன.

லிங்கன் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு அதிகபட்சமாக ஓராண்டுச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

915 total views