லண்டன் விமான நிலையம் முடங்கும் அபாயம்!

Report

லண்டன் சிட்டி விமான நிலையம், பருவநிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் முடக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் அதற்குத் தயாராகி வருகிறது.

Extinction Rebellion என்னும் பெயரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

லண்டனின் ஐந்தாவது ஆகப் பெரிய விமான நிலையம் லண்டன் சிட்டி. குறுகிய தொலைவுப் பயணங்களுக்கும், வட்டார நகரங்களுக்கும் செல்ல, வர்த்தகர்கள், வங்கியாளர்கள், அரசியல்வாதிகள்-ஆகியோர் அந்த விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்துவதுண்டு.

அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாடுகளை மூன்று நாள்களுக்கு நிறுத்தி வைக்கச் சூளுரைத்துள்ளனர்.

இன்று 18,000 பயணிகள் அந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தவுள்ளனர். 286 விமானச் சேவைகள் பாதிக்கப்படலாம். தனது ஆர்ப்பாட்டம் வன்முறையற்றதாக இருக்கும் என்று Extinction Rebellion தெரிவித்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாய்த் தெரிவிக்கப்பட்டது.

1165 total views